Tuesday, 30 June 2020

Reflection - 2 Understand & Love

Understand & Love

Understanding: A proper concern for a real Loving personality.

We discuss more about love these days since we face an enormous lacksity of it. 

Why most of the time we fail in loving a person?

The right area of such question to search for is nothing but Understanding.... 

Hope you understand....

Persons who love each other with proper understanding will win the race. No person is correctly sculpted. At one point of time we think someone as our right loving partner (perhaps maternal, fraternal, paternal, friendly, marital etc.) I speak love in general because we fail in all the areas. 

Understanding a partner is very important than talking, dating, calling, caressing, kissing, caring and so on. Because every other things will pop up only when you have a proper understanding. 

Misunderstanding is the root cause of all the problems in life in love. Love should not believe the misconceptions from outside. Even if your mind says by itself to you make sure you did not love the other really.

Love never leaves the feeling of insecurity as like a mother. Though the other person sins in front of you, your Love on that person understands 'Why?' of the sin and sees 'Who?' of the person and says the word "it's k".

Let us try to figure out where we failed to bring about a proper structure for our love which is actually shapeless without understanding. 

Think of the moments when we, by mistake, hurt a person by misunderstanding them.

Jesus understood the heart of the people and healed them. He knew why those people sinned and outdone the laws. Yet He loved them and gave them His life. 

Let's Pray:
O Dear Lord Jesus the beginners guide of Love, make us love one another by understanding them. Amen

Reflection - 1 Life is So Mystical

Reflection - 1

"Life is so mystical"

One cannot easily understand & predict what will happen in the very next moment of our life. But life is not so cruel to abandon you in a state of loneliness. 

For everyone life gives an opportunity to envision a goal. Life gives Someone or somebody to pass by or stay forever and tells us there is another way and there are more distance to travel along. Life also shows somebody to learn how not to be like them, such will take your life mercilessly. 

Getting a good friend or an understanding partner in our life journey is a God given gift. 

# Mother Mary's journey with Christ,
# Disciples' journey with & after Christ, 
# St. Paul's journey with the Risen Lord, whom he had never been with but encountered and lived, Etc.

Let us remember Jesus says to us "No Love is greater than laying down his / her life for a friend (perhaps father, mother, son, daughter, sister, brother etc.)"


Let's Pray:
Lord the incarnation of Love, as you initiated the divinity of love for the first time in this world, allow us also to partake in the true sense of being loved and to love as you did. 

(For your Reflection: Who is your friend (...)?)

Monday, 29 June 2020

Special Reflection - Sts Peter & Paul

                    Peter - Paul Strategy

(On the feast day of Sts Peter & Paul)

Pentecost is the birthday of the church and today (feast) is the day in which the church is constructively & theologically built. We could even say it is a BLOODY CHURCH. Because the church is built by the blood of the martyrs. 

We could see two characters in this day. St. Peter and St. Paul.

The former is a chosen one from the so called least state and raised to a higher level. The latter was chosen from a so called higher state and was sent to the least of spirit.  

This is what the real revolution would be. God breaks the statical hierarchy by them today. God brings them together as a beautiful combination of center and the periphery.

St. Peter was a hard broken rod and a short tempered man. St. Paul stammered the Jews for following Jesus. 

Both are damn shit sinners. Peter practically denied Jesus. Paul destroyed Christianity. But Jesus turned them into pillars of Christianity.

In Paul God found the strength to destroy and so He used him to create. In Peter God found an urge to live an earthly life and so He used him to die for the heavenly kingdom.

What a beautiful plan it was!!!

Don't worry if you are a broken pot in front of human beings. Psalmist would say, *"Trust and take refuge in the Lord than to believe in Mortals (humans)."* Ps: 118:8

Let's not brood over the human trials on us. Always keep our heart straight to the  heavenly light where you can no more find the dark shadow. 

Church is not really a Capitalistic Construction, it should not be, but a Captivating Conjunction of Faith, Hope and Love.

Let's Pray:
O Lord dear to my heart.... Rule me within and let me not rule others outside. Bring me closer to a place where I can stand side by side with Love and Mercy. Amen

Sunday, 28 June 2020

அடிப்படை செபங்கள் புதியது



1. சிலுவை அடையாளம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்

2. மூவொரு இறைவன் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

3. திருச்சிலுவை அடையாள செபம்
புனித சிலுவை / அடையாளத்தினாலே / எங்கள் எதிரிகளிடமிருந்து / எங்களை விடுவித்தருளும். / எங்கள் இறைவா / தந்தை, / மகன், / தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.

4. தூய்மை மிகு நற்கருணை புகழ்
நிலையான புகழுக்குரிய தூய இறை நற்கருணைக்கு எல்லாக் காலமும் தொழுகையும், புகழும், போற்றியும், மாட்சியும் உண்டாகக் கடவது.

நிலையான புகழுக்குரிய தூய நற்கருணைக்கு எல்லாக் காலமும் தொழுகையும் புகழும் உண்டாகுக. (பாடல்)

5. இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

6. தூதுரை மன்றாட்டு 
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
புனித மரியே, இறைவனின் தாயே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.

7. நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய / இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். / இவர் தூய ஆவியாரால் கருவுற்று / கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் / சிலுவையில் அறையப்பட்டு, / இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி, / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். 
விண்ணகத்துக்கு எழுந்தருளி, / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். / அங்கிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க வருவார். / தூய ஆவியாரை நம்புகிறேன். / புனித  கத்தோலிக்கத் திரு அவையை நம்புகிறேன். / புனிதர்களுடைய உறவு ஒன்றிப்பை நம்புகிறேன். / பாவ மன்னிப்பை நம்புகிறேன். / உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். / நிலைவாழ்வை நம்புகிறேன். - ஆமென்.

8. ஓ என் இயேசுவே! 
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பாக உதவி புரியும்.

9. மூவேளைச் செபம்

முதல்: ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.

எல்: அவளும் தூய ஆவியரால கருத்தரித்தார் - அருள் நிறை

முதல்: இதோ ஆண்டவரின் அடிமை
எல்: உமது சொற்படியே எனக்கு நிகழட்டும் - அருள் நிறை

முதல்: வாக்கு மனிதரானார்
எல்: நம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறை

முதல்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
எல்: இறைவனின் புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக

இறைவா! உம் திருமகன் மனிதர் ஆனதை உம்முடைய வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


10. பாஸ்கா காலத்தில் மூவேளை செபம்

முதல்: விண்ணக அரசியே ! மனம் களிகூறும், 
எல்: அல்லேலூயா
முதல்: ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கப் பேறு பெற்றீர்,
எல்: அல்லேலூயா
முதல்:  தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார்,
எல்: அல்லேலூயா
முதல்: எங்களுக்காக இறைவனை மன்றாடும்,
எல்: அல்லேலூயா
முதல்: கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர்,
எல்: அல்லேலூயா
முதல்: ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார்,
எல்: அல்லேலூயா

செபிப்போமாக

இறைவா! உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் உலகம் மகிழ திருவுளம் கொண்டீரே! அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் என்றென்றும் நிலைவாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற, அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்  - ஆமென்.


11. கிருபை தயாபத்து செபம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே!


முதல்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
எல்: இறைவனின் புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! அருள் மிகப் பெற்ற  கன்னித்தாயான மரியாயினுடைய ஆன்மாவும் உடலும் தூய ஆவியாரின் கருணையால் உம்முடைய திருமகனுக்கு உகந்த தூய பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த புனித தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் அனைத்து தீமைகளினின்றும் முடிவில்லா இறப்பினின்றும் மீட்கும்படி அருள்புரிந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.



12. புனித பெர்னார்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்

மிகவும் இரக்கமுள்ள தாயே! தூய கன்னி மரியே! இதோ.. உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து சரணடைந்து உமது அருட்காவலை மன்றாடிய ஒருவரையும் நீர் கைவிட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும் கன்னியருடைய அரசியான கன்னிகையே தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் நான் தூண்டபெற்று அடியேன் உம் திருப்பாதம் அண்டி வருகிறேன். பாவியாகிய நான் உம் திருமுன் துயரத்தோடு உமது இரக்கத்திற்காக காத்து நிற்கிறேன். மனுவுருவான திருமகனின் தாயே! எம் மன்றாட்டைப் புறக்கணியாமல் எனக்காக தயாவாய் வேண்டிக்கொள்ளும். - ஆமென்

13. கிறிஸ்துவின் ஆன்மாவே

கிறிஸ்துவின் ஆன்மாவே என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் திரு உடலே என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே என்னை எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே என்னைக் கழுவிடுமே.

கிறிஸ்துவின் பாடுகளே என்னைத் தேற்றிடுமே.
ஓ நல்ல இயேசுவே எனக்குச் செவிசாயும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரிய விடாதேயும்.

தீயப் பகைவரிடம் இருந்து என்னைக் காத்தருளும்.
எனது இறப்பின் வேளையினில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
புனிதர்களுடன் எக்காலமும் உம்மைப் புகழச் செய்யும். ஆமென்.

14. காவல் தூதரை நோக்கி செபம்

எனக்குக் காவலாய் இருக்கிற இறைவனின் தூதரே! இறைவனின் கருணையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு இறை ஒளியைத் தந்து, என்னைத் தீமைகள் அனைத்திலிருந்தும் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.


15. சுருக்கமான மனத்துயர் மன்றாட்டு

என் இறைனாகிய தந்தையே, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும், நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும் மனம் வருந்துகிறேன். உமது அருள் உதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கூறுகின்றேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.


16. நீண்ட மனத்துயர் மன்றாட்டு

என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும், மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். எனக்கு உம்முடைய அருள்வரங்களையும் விண்ணக பெருமகிழ்வையும் தந்தருள்வீரென்று முழுமனதுடன் நம்புகிறேன். திருஅவை கற்பிக்கும் அனைத்தும் நீரே அறிவித்துள்ள காரணத்தினால் முழுமையாக நம்புகிறேன். ஆமென்.


17. கடவுளின் ஆறு சிறப்பாக பண்புகள்
1. கடவுள் தாமாக இருக்கிறார்.
2. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்.
3. உடலும் உருவமும் இல்லாமல் இருக்கிறார்.
4. அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாய் இருக்கிறார்.
5. எங்கும் நிறைந்திருக்கிறார்.
6. எல்லாவற்றிற்கும் முழு முதல் காரணமாய் இருக்கிறார்.


18. கடவுளின் கட்டளைகள்

இறைவன் நமக்கருளிய கட்டளைகள் பத்து.

1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.

2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.

3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு.

4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட

5. கொலை செய்யாதே.

6. விபசாரம் செய்யாதே.

7. களவு செய்யாதே.

8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.

9. பிறர் மனைவி மீது ஆசை கொள்ளாதே.

10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.

(இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்)

  • எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது.
  • தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது.

19. திருஅவையின் ஒழுங்குமுறைகள்

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் திருப்பலியில் முழுமையாய்ப் பங்கேற்க வேண்டும்..

2.  ஆண்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க வேண்டும்.

3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்று, நற்கருணை உட்கொள்ள வேண்டும்.

4. திரு அவை குறிப்பிட்டுள்ள நாட்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும். நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்.

5. குறைந்த வயதிலும், திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.

6. திரு அவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும்.


20. உணவருந்துமுன் ஜெபம்

அன்பு இறைவா! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்


21. உணவருந்திய பின் ஜெபம்

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உமது அருட்கொடைகளில் இருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகின்றோம். ஆமென்.

இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.


22. தூய ஆவியாரின் கொடைகள் (எசா 11:2)

1) ஞானம்
2) மெய்யுணர்வு
3) அறிவுரைத் திறன்
4) நுண்மதி
5) ஆற்றல்
6) இறைப்பற்று
7) இறை அச்சம்


23. தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் (கலா 5:22-23)

1) அன்பு
2) மகிழ்ச்சி
3) அமைதி
4) பொறுமை
5) பரிவு
6) நன்னயம்
7) நம்பிக்கை
8) கனிவு
9) தன்னடக்கம்
10) பணிவு நயம்
11) தாராள குணம்
12) நிறை கற்பு


24. தூய ஆவியார் அருளும் வரங்கள் (1கொரி 12:8-10)

தூய ஆவியார் அருளும் வரங்கள் ஒன்பது. அவை:

  1. ஞானம் நிறைந்த சொல்வளம்
  2. அறிவு செறிந்த சொல்வளம்
  3. இறை நம்பிக்கை
  4. பிணிதீர்க்கும் அருள் கொடை
  5. வல்ல செயல் செய்யும் ஆற்றல்
  6. இறைவாக்குரைக்கும் ஆற்றல்
  7. ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல்
  8. பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல்
  9. பரவசப் பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவை ஆகும்.

25. தூய ஆவியாரின் அடையாளங்கள்
1. நீர்
2. அருட்பொழிவு
3. நெருப்பு
4. மேகம், நெருப்பு, மின்னல்
5. புறா
6. காற்று

26. ஏழு தலையான பாவங்கள்

1. தற்பெருமை
2. சீற்றம்
3. காம வெறி
4. பேராசை
5. பெருந்தீனி விரும்பல்
6. பொறாமை
7. சோம்பல்


27. தலையான பாவங்களுக்கு எதிரான நற்பண்புகள்

1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. தாராள குணம்
5. அளவோடு உண்ணல்
6. பிறரன்பு
7. சுறுசுறுப்பு


28. அருள் வாழ்வு சார்ந்த மூன்று நற்பண்புகள்

1. நம்பிக்கை
2. எதிர்நோக்கு
3. அன்பு


29. அருளடையாளங்கள்

1) திருமுழுக்கு
2) உறுதிப்பூசுதல்
3) நற்கருணை
4) ஒப்புரவு
5) நோயில்பூசுதல்
6) குருத்துவம்
7) திருமணம்

Tuesday, 23 June 2020

Special Reflection - Birth of John the Baptist

                 Birth of John Baptist

As we celebrate the Birth of St. John the Baptist, I thought of reflecting on his birth and our birth. 

SJB born to prophesy the coming of Messiah... He was not born with silver spoon rather with a metal staff. His birth is a great example for our existence. 

Was he born only to prophesy Messiah's coming or something else???

His purpose of coming is not only to announce Messiah's arrival but also to prepare the path that nobody has trodden. 

His famous dictum is this... Repent.
Thus the path to kingdom of God is our heart. 

But is only repentance his news?

Perhaps some more too...

His life is of both words and actions...

He was a field revolutionary. While he was in his mother's womb he leapt when Blessed Virgin Mary wished Elizabeth... He began his revolution at that very moment. He was then fostered by BVM's Magnificat. 

We could see that spirit when he confronted the King for his adulterous relationship. 

So he is a man of virtues: Honest, Humble, True to God, Courageous, Simple and sounding.

Let us examine ourselves...🤔🤔

# Do we really have the courage to confront immorality of a person?
If you do the world will question you: "Why do you worry about them, let them be on their own." If you don't do the world will mark you as indifferent and coward

# Do we really prepare our hearts for Messiah?
If yes the world would say good actor, expecting publicity. If no, then the world world would say: "Your prayer life is poor."

# Do we really fight for justice? 
If yes, then you are an immoral person to the world since you question positions.
If no, then you are a selfish for the world. 

Whatever we do there are people who criticize everything. It also happened to SJB and Jesus as well. 

Let's take the least trodden path of SJB.

Let's pray:
Lord the Fighter of justice so honest let me also have courage in choosing the narrow way like St. John the Baptist. Amen