9. மூவேளைச் செபம்
முதல்: ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
எல்: அவளும் தூய ஆவியரால கருத்தரித்தார் - அருள் நிறை
முதல்: இதோ ஆண்டவரின் அடிமை
எல்: உமது சொற்படியே எனக்கு நிகழட்டும் - அருள் நிறை
முதல்: வாக்கு மனிதரானார்
எல்: நம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறை
முதல்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
எல்: இறைவனின் புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
இறைவா! உம் திருமகன் மனிதர் ஆனதை உம்முடைய வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
10. பாஸ்கா காலத்தில் மூவேளை செபம்
எல்: அல்லேலூயா
முதல்: ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கப் பேறு பெற்றீர்,
எல்: அல்லேலூயா
முதல்: தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார்,
எல்: அல்லேலூயா
முதல்: எங்களுக்காக இறைவனை மன்றாடும்,
எல்: அல்லேலூயா
முதல்: கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர்,
எல்: அல்லேலூயா
முதல்: ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார்,
எல்: அல்லேலூயா
செபிப்போமாக
இறைவா! உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் உலகம் மகிழ திருவுளம் கொண்டீரே! அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் என்றென்றும் நிலைவாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற, அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் - ஆமென்.
11. கிருபை தயாபத்து செபம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே!
எல்: இறைவனின் புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! அருள் மிகப் பெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆன்மாவும் உடலும் தூய ஆவியாரின் கருணையால் உம்முடைய திருமகனுக்கு உகந்த தூய பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த புனித தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் அனைத்து தீமைகளினின்றும் முடிவில்லா இறப்பினின்றும் மீட்கும்படி அருள்புரிந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
14. காவல் தூதரை நோக்கி செபம்
எனக்குக் காவலாய் இருக்கிற இறைவனின் தூதரே! இறைவனின் கருணையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு இறை ஒளியைத் தந்து, என்னைத் தீமைகள் அனைத்திலிருந்தும் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.
15. சுருக்கமான மனத்துயர் மன்றாட்டு
என் இறைவனாகிய தந்தையே, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும், நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும் மனம் வருந்துகிறேன். உமது அருள் உதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கூறுகின்றேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.
16. நீண்ட மனத்துயர் மன்றாட்டு
என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும், மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். எனக்கு உம்முடைய அருள்வரங்களையும் விண்ணக பெருமகிழ்வையும் தந்தருள்வீரென்று முழுமனதுடன் நம்புகிறேன். திருஅவை கற்பிக்கும் அனைத்தும் நீரே அறிவித்துள்ள காரணத்தினால் முழுமையாக நம்புகிறேன். ஆமென்.
17. கடவுளின் ஆறு சிறப்பாக பண்புகள்
1. கடவுள் தாமாக இருக்கிறார்.
2. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்.
3. உடலும் உருவமும் இல்லாமல் இருக்கிறார்.
4. அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாய் இருக்கிறார்.
5. எங்கும் நிறைந்திருக்கிறார்.
6. எல்லாவற்றிற்கும் முழு முதல் காரணமாய் இருக்கிறார்.
18. கடவுளின் கட்டளைகள்
இறைவன் நமக்கருளிய கட்டளைகள் பத்து.
1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.
3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு.
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட
5. கொலை செய்யாதே.
6. விபசாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவி மீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.
(இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்)
- எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது.
- தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது.
19. திருஅவையின் ஒழுங்குமுறைகள்
1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் திருப்பலியில் முழுமையாய்ப் பங்கேற்க வேண்டும்..
2. ஆண்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க வேண்டும்.
3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்று, நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
4. திரு அவை குறிப்பிட்டுள்ள நாட்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும். நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்.
5. குறைந்த வயதிலும், திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.
6. திரு அவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும்.
20. உணவருந்துமுன் ஜெபம்
அன்பு இறைவா! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்
21. உணவருந்திய பின் ஜெபம்
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உமது அருட்கொடைகளில் இருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகின்றோம். ஆமென்.
இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.
22. தூய ஆவியாரின் கொடைகள் (எசா 11:2)
1) ஞானம்
2) மெய்யுணர்வு
3) அறிவுரைத் திறன்
4) நுண்மதி
5) ஆற்றல்
6) இறைப்பற்று
7) இறை அச்சம்
23. தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் (கலா 5:22-23)
1) அன்பு
2) மகிழ்ச்சி
3) அமைதி
4) பொறுமை
5) பரிவு
6) நன்னயம்
7) நம்பிக்கை
8) கனிவு
9) தன்னடக்கம்
10) பணிவு நயம்
11) தாராள குணம்
12) நிறை கற்பு
24. தூய ஆவியார் அருளும் வரங்கள் (1கொரி 12:8-10)
தூய ஆவியார் அருளும் வரங்கள் ஒன்பது. அவை:
- ஞானம் நிறைந்த சொல்வளம்
- அறிவு செறிந்த சொல்வளம்
- இறை நம்பிக்கை
- பிணிதீர்க்கும் அருள் கொடை
- வல்ல செயல் செய்யும் ஆற்றல்
- இறைவாக்குரைக்கும் ஆற்றல்
- ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல்
- பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல்
- பரவசப் பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவை ஆகும்.
26. ஏழு தலையான பாவங்கள்
1. தற்பெருமை
2. சீற்றம்
3. காம வெறி
4. பேராசை
5. பெருந்தீனி விரும்பல்
6. பொறாமை
7. சோம்பல்
27. தலையான பாவங்களுக்கு எதிரான நற்பண்புகள்
1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. தாராள குணம்
5. அளவோடு உண்ணல்
6. பிறரன்பு
7. சுறுசுறுப்பு
28. அருள் வாழ்வு சார்ந்த மூன்று நற்பண்புகள்
1. நம்பிக்கை
2. எதிர்நோக்கு
3. அன்பு
29. அருளடையாளங்கள்
1) திருமுழுக்கு
2) உறுதிப்பூசுதல்
3) நற்கருணை
4) ஒப்புரவு
5) நோயில்பூசுதல்
6) குருத்துவம்
7) திருமணம்