புனித யோசேப்பு திருவிழா நவநாள் செபம்
எல்லாம் வல்ல எங்கள் அன்புத் தந்தையே! உமது அன்பு மகனின் வளர்ப்புத் தந்தையாக நேர்மையாளரான புனித யோசேப்பை நீர் தேர்ந்தெடுத்தீரே. எங்களைக் காக்கவும் எங்களை நல்வழியில் நடத்தவும், எங்களுக்கு அவரைப் போன்ற காவலரைத் தந்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இதனால், உமது அன்பு மகன் இயேசு கிறிஸ்துவைப் போல் உருவாகும் இறைமக்கள் ஏராளமானோர் உமக்குத் தோன்றுவார்களாக.
இறைவனின் மகனாகயிருந்தும் உம்மையே புனித யோசேப்பின் கையில் ஒப்படைத்து அவரது ஆதரவில் வளர்ந்த இயேசுவே, நாங்களும், எங்களை உருவாக்கும் பெற்றோர்களுக்கும், எங்கள் தலைவர்களுக்கும், திருஅவைக்கும் எப்பொழுதும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க அருள் புரியும். திருக்குடும்பத்தை உமது திருவருளால் திறம்படக் காத்தத் தூய ஆவியாரே, எங்கள் குடும்பத்தையும் இறைவனின் திருவுளப்படி பாதுகாத்தருளும்.
இயேசுவை வளர்க்கும் பணியில் புனித யோசேப்பை உமது வாழ்க்கைத் துணைவராகவும், உமது இல்லத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றிய தூய கன்னி மரியே, அவருடைய மேலான பாதுகாவலை எங்களுக்குப் பெற்றுத் தாரும். அதனால் நாங்கள் இவ்வுலக வாழ்வை இறைவனின் திருவுளப்படி எளிமையில் அமைத்து நடப்போமாக.
திருக்குடும்பத்தின் தலைவரான புனித யோசேப்பே, எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழி நடத்தியருளும். திருக்குடும்பத்தை உமது உழைப்பால் உணவூட்டிக் காத்தப் புனித யோசேப்பே, எங்கள் அறிவாலும், உழைப்பாலும், எங்கள் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து, செழிப்புறச் செய்யத் துணை புரிந்தருளும்.
குழந்தை இயேசுவை ஆபத்திலிருந்து காப்பாற்றிய புனித யோசேப்பே, எங்கள் வாழ்க்கையில் நேரிடும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும். இயேசு, மரியாவின் கைகளில் உம் ஆன்மாவை ஒப்படைத்து நல்ல மரணமடைந்த புனித யோசேப்பே, நாங்களும் நல்ல மரணமடைய அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
மரியா தாவீது குடும்பத்தாராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். (லூக் 1:27)
தியானச் சிந்தனைகள்:
1. புனித யோசேப்பு அன்னை மரியாவுக்கு துணைவராக எல்லா காலத்திற்கும் முன்னரே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கண்களுக்கு புலப்படாத மரியாளின் இறைத்துணைவராம் தூய ஆவியாரின் இடத்தை ஏற்று உண்மையான தகுதியுள்ள துணைவராக இருந்தார்.
2. கன்னிமை குன்றா மரியாளைப் போல அவரும் தன்னுடைய கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ்நாள் முழுவதும் மாசற்று விளங்கினார்.
3. உலக பரப்பை பாதுகாக்கிற கடவுளின் தேவதையாகவே அவர் வாழ்ந்தார். கடவுளுக்கும் மனிதருக்கும், விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் ஒப்புரவு ஏற்படுத்தி நல்லிணக்கம் ஏற்படுத்துகிறவராக திகழ்ந்தார்.
புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்:
1. அவருடைய தூய்மைக்கான தாகம்
2. அவருடைய ஐம்புலன்களையும் ஆளும் தன்மை
3. அவருடைய உடலையும் மனதையும் துன்புறுத்துகிறவற்றை நோன்பு நிலையோடு ஏற்கும் தன்மை
செபம்: புனித யோசேப்பே! இயேசுவுக்கும் அன்னை மரியாளுக்கும் ஆறுதலாகவும் பாதுகாவலராகவும் பிறந்தவரே! நான் பக்தியோடு எடுக்கும் என் தீர்மானங்கள் வீணாய் போகாமலும், எனது புனிதம் அதிகரிக்கும் வண்ணம், தூய வாழ்வு வாழ்வில் அதீத நாட்டம் கொண்டு, எனது நிறை குறைகளை ஏற்று, ஒளியைப் போன்று மிகத் தெளிவாக நிலை வாழ்வுக்கான காரியங்களில் மாண்பும் மகிழ்ச்சியும் கொண்டு, உலக காரியங்களில் வெறுமையுற்று, அக வாழ்விலும் ஆன்மிக வாழ்விலும் நான் மீண்டும் பிறப்பெடுக்கும்படி உமது வல்லமையுள்ள பரிந்துரையை அளித்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். ஆமென்.
முதல் நாளில் ஏறெடுக்க வேண்டிய பக்தி முயற்சிகள்:
1. உடல் சார்ந்த காரியங்களில் எளிமையை கடைப்பிடிப்பது
2. தேவையில்லாததைப் பார்ப்பதிலிருந்தும் கேட்பதிலிருந்தும் நமது ஆர்வத்தை அழித்துக் கொள்வோம்.
3. நற்செய்திகளில் அதிமாக பேசாதிருந்து இறைத்திட்டத்தை நிறைவேற்றிய புனித யோசேப்பின் அமைதியான குணத்தை குறித்து தியானித்து, அதிகம் பேசுவதைக் குறைத்துக் கொள்வோம்.
தலை: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
எல்: புனித யோசேப்பே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா! உமது தூய அன்னையின் துணையாளராம் புனித யோசேப்பின் நற்பண்புகளால் உதவப் பெற்று, நாங்கள் வேண்டி பெற முடியாத தேவைகளையும் அவருடைய பரிந்துரையால் பெற்றுக் கொள்ளுமாறு உம்மை வேண்டுகிறோம். தந்தையாகிய இறைவனோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
புனித யோசேப்பின் தனிச்சிறப்புகளை விவரிக்கும் வாக்கியங்கள்:
- இயேசுவின் தந்தை என்று அழைக்கப்பட தூய ஆவியாரால் மேன்மை செய்யப்பட்டார். – ஜெர்சன்
- மனிதராய் பிறந்தவர்களுள் புனித யோசேப்பை போன்று அன்னை மரியாளை பிரதிபலித்தவர் எவருமிலர். – ஜெர்சன்
- திருஅவையின் மனநிலைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப இறைவனின் தாயாம் அன்னை மரியாளோடு இயேசுவின் பிள்ளைப் பருவத்தின் காவலரும் கண்ணியமிக்க தந்தையுமான புனித யோசேப்பையும் கன்னிமை குன்றாதவர் என்று புகழப்பெறுகிறார். – புனித பீட்டர் தமியான்.
- புனித யோசேப்பில் தூய்மைக்கும் வாய்மைக்கும் நிகராக பிறவிப் பாவத்தால் ஏற்படும் உலக ஆசைகளின் நெருப்பு அழிந்துவிட்டது அல்லது குறைந்தபட்சம் செயலற்றுப்போய் இருந்தது. – ஜெர்சன்
- வானதூதர் மற்றும் விண்ணோருக்கு அரசியாக இருக்கின்ற இறையன்னை மரியாவைத் திருமணம் செய்த புனித யோசேப்பும் விண்ணோர் அனைவருக்கும் அரசராக இருக்கிறார். – புனித லெனார்ட்
திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர். (யோவா 1:45)
தியானச் சிந்தனைகள்:
1. புனித யோசேப்பு இறைமகனின் தந்தை என்றழைக்கப்படுவதற்கு தகுதியானவர், ஏனெனில் பூவுலகில் தந்தையாம் கடவுளின் பிரதிநிதியாக அவர் இருந்தார். இயேசு கிறிஸ்துவை பொருத்தமட்டில் படைப்பனைத்திலும் அவர் மட்டுமே ஒரு பெற்றோருக்குரிய முழு அதிகாரத்தையும் செலுத்தும் பேறுபெற்றார்.
2. இயேசு தன் விருப்பப்படி புனித யோசேப்பு அவருடைய தந்தையாகுமாறு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு அன்னை மரியாவோடு இருந்த தூய ஒன்றிப்பு வழிவகுத்தது.
3. அன்னை மரியா தன் விருப்பப்படி புனித யோசேப்பு அவருடைய துணைவராகுமாறு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் நிமித்தம் இறைமகனுக்கு இயேசு என்னும் பெயரிடவும் அவருக்கு தேவையானவற்றைப் பெற்றுத் தர உழைக்கவும், அவரை உலக ஆபத்துக்களினின்று பாதுகாக்கும் அருளைப் பெற்றார்.
புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்:
1. அவருடைய தாழ்ச்சி
2. கடவுளின் திருவுளத்திற்கு அவர் இசைந்திருக்கும் தன்மை
3. அவருடைய தந்தையின் அன்பு
செபம்:
அவைரையும் படைத்து பாதுகாக்கும் எல்லாம் வல்ல இறைவா! விண்ணக தூதரணியும் மண்ணக தூயவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அருளியவரே, எம் தந்தையாகிய உமது கரங்களிலிருந்து வெளிவருவனவற்றை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு உமது இறைத்திருவுளத்தை நிறைவேற்றி உம்மை மகிமைப்படுத்த உம்மை மன்றாடுகின்றோம். எனது பிடிவாதமான குணத்திலிருந்து விடுபட தேவையான அருளைத் தாரும். அதனால் எனது கடந்த காலத்தின் துன்பங்கள் எங்களை பாதிக்காமலிருக்கவும் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து நாங்கள் காக்கப்படவும் அருள் தாரும். எங்களது எண்ணங்கள் தூய்மையாக்கப்படவும், கானானயியப் பெண்ணின் காணிக்கைப் போன்று எனது செயல்கள் உமது முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உமது தூய கருவூலத்தில் சேர்க்கப்படவும் வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.
இரண்டாம் நாளில் ஏறெடுக்க வேண்டிய பக்தி முயற்சிகள்:
1. கடவுளிடமிருந்து நம்மை பிரிக்கும் சாவான பாவங்களிலிருந்தும் தவறான பழக்கங்களிலிருந்தும் விடுபட்டு இயேசுவின் அன்பில் நிலைத்திருத்தல்
2. இயேசுவை அன்பு செய்ய மறந்த நேரங்களுக்காக மன்னிப்பு வேண்டி நோன்பிருந்து செபித்தல்
3. நற்கருணையிலிருக்கும் ஆண்டவரை சந்தித்து அவர் மீது வைத்திருக்கும் அன்பு அதிகரிக்குமாறு செபித்து புனித யோசேப்பு அவர்மீது வைத்த அன்பை அர்ப்பணித்து மன்றாடுதல்
தலை: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
எல்: புனித யோசேப்பே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா! உமது தூய அன்னையின் துணையாளராம் புனித யோசேப்பின் நற்பண்புகளால் உதவப் பெற்று, நாங்கள் வேண்டி பெற முடியாத தேவைகளையும் அவருடைய பரிந்துரையால் பெற்றுக் கொள்ளுமாறு உம்மை வேண்டுகிறோம். தந்தையாகிய இறைவனோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
புனித யோசேப்பின் தனிச்சிறப்புகளை விவரிக்கும் வாக்கியங்கள்:
- புனித யோசேப்பு இயேசுவின் மீது பெற்றோருக்குரிய அதிகாரத்தை கொண்டிருந்தார். – கார்னெல்
- தூய உரைவிடத்தில் வாழும் எந்த ஆன்மாக்களுக்கு இயேசுவின் தந்தை என்ற பெயர் அளிக்கப்படவில்லை. – புனித சிப்ரியன்
- புனித யோசேப்பு தனக்கும் கன்னி மரியாளுக்கும் இடையேயான திருமண ஒழுக்கத்தினாலும் அவர்களிடையேயான அன்பினாலும் இயேசுவின் தந்தையாக இருந்தார். – புனித ஜெரோம்
- அவருக்கு (யோசேப்பாகிய நீர்) இயேசு என்று பெயரிடுவீர். – மத் 1:21
- மரியாவின் கணவரானதால் யோசேப்பு மிகவும் மேலான மகத்துவம் பெற்றுவிட்டார். மரியா எந்த இடத்தில் கடவுளால் வைக்கப்பட்டாரோ, அதற்கு நிகரான கணவராக யோசேப்பு இருக்கிறார். அவருக்கு தந்தைக்குரிய அன்பு, ஆளுமை ஆகியவற்றையும், அவருக்கே உரிய காப்பாளர் பணியையும் கடவுள் அளித்திருந்தார். புனித யோசேப்பின் பெயரே, அவரது மேன்மை மற்றும் தூய செயல்பாடுகளைப் பறைசாற்றுகிறது. – தமஸ்கு நகர் புனித யோவான்
இயேசு அவர்களுடன் (யோசேப்போடு) சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். (லூக் 2:51)
தியானச் சிந்தனைகள்:
1. இயேசு கிறிஸ்துவின் தந்தை எனப்பட புனித யோசேப்பு பேறுபெற்றார். அந்த அருளின் மூலம் மீட்பரின் பொறுப்பாளராகவும், ஒரு தந்தை மகனிடம் கொள்ளும் உரிமைகளை யோசேப்பு இயேசுவிடம் வைத்திருக்கவும் அருளப்பட்டார்.
2. இயேசு இறையாட்சியின் மன்னராக இருந்தாலும் யோசேப்பு அவரிடத்தில் முழு உரிமையும் பெற்றிருந்தார். ஏனெனில் இயேசு யோசேப்பின் மகனாக மனுவுருவெடுத்ததன் மூலம் தனது முழு சுதந்திரத்தையும் அவரிடம் ஒப்படைத்தார்.
3. உண்மையிலேயே இயேசு யோசேப்புக்கு அவர் இறக்கும் வரை பணிவிடை செய்தார். யோசேப்பின் அலுவல்களில் பங்கெடுத்து அவரது தொழிலில் உதவியாகவும் இருந்தார்.
புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்:
1. அவர் இயேசுவின் மீது கொண்டிருந்த விலைமதிக்க முடியாத மரியாதையும், இயேசுவின் மீது உரிமை செலுத்துவதில் அவருக்கு இருந்த தாழ்ச்சியும்
2. அவர் இயேசுவுக்கு தந்தைக்குரிய அன்போடு கட்டளைகள் இடும்போது அவர் கொண்டிருந்த கனிவும் அமைதியும்
3. உன்னதரான இயேசு மனிதக் குழந்தையாக உருவெடுத்த போதிலும் அவர் மீது யோசேப்பு வைத்திருந்த அசைக்க முடியாத உணர்வுகலந்த நம்பிக்கை.
செபம்:
எல்லாம் வல்ல இறைவா! உமது கட்டளையின் ஒவ்வொரு மரமும் அதன் கனிகளை கொடுக்கின்றன. நாங்களும் புனித யோசேப்பு மற்றும் அன்னை மரியாளின் பரிந்துரையால் நீர் எமக்களித்த இந்நிலையிலிருந்து உமக்கு நம்பிக்கையுடன் பணிபுரிய வேண்டுமென்று அருள்புரியும். நீர் வெளிப்படுத்திய அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். விளக்கில் எண்ணெய் இல்லாமல் சென்ற கன்னியர்களின் கூட்டத்தில் நாங்களும் சேர்க்கப்படாமல் இருக்க எங்களை காப்பாற்றுங்கள். நாங்கள் பட்டுப்போய் அணையாமல் எரியும் நரக நெருப்பில் எரிக்கப்படும் அத்தி மரம் போல் அல்லாமல், தாழ்ச்சியோடும், ஈகை குணத்தோடும், கற்பொழுக்கம் தவறாமலும் வாழ அருள்புரியும். இதையெல்லாம் இயேசுவின் எண்ணிலடங்கா தகுதிகளின் பேரில் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
மூன்றாம் நாளில் ஏறெடுக்க வேண்டிய பக்தி முயற்சிகள்:
1. தம்மைக் காட்டிலும் வலிமைக்குன்றியவரிடத்தில் தாழ்ச்சியோடு இருத்தல்.
2. நாம் பிறருக்கு கட்டளையிடும் நிலையில் இருக்கும் போது நமது போக்கில் கனிவுடனும் மென்மையாகவும் இருக்க வேண்டும்.
3. பிறரிடம் கடினமாக நடந்து கொண்ட தருணங்களை எண்ணியும், நமக்கு பொறுப்புகள் விதிக்கப்படும்போது முணுமுணுப்போடு செயல்பட்ட தருணங்களை எண்ணியும் மனம் வருந்துவோம். அதற்கு பரிகாரமாக 5 முறை இயேசு கற்பித்த செபமும் 5 முறை அருள் நிறை மரி செபமும் சொல்லி தரையை 5 முறை முத்தமிட வேண்டும்.
தலை: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
எல்: புனித யோசேப்பே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா! உமது தூய அன்னையின் துணையாளராம் புனித யோசேப்பின் நற்பண்புகளால் உதவப் பெற்று, நாங்கள் வேண்டி பெற முடியாத தேவைகளையும் அவருடைய பரிந்துரையால் பெற்றுக் கொள்ளுமாறு உம்மை வேண்டுகிறோம். தந்தையாகிய இறைவனோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
புனித யோசேப்பின் தனிச்சிறப்புகளை விவரிக்கும் வாக்கியங்கள்:
- இயேசு புனித யோசேப்பின் காவலிலிருந்த போது கொண்டிருந்த எல்லையில்லா கீழ்படிதலைப் போல யோசேப்புக்கு அருளப்பட்ட மாண்பும் ஒப்பிடமுடியாததாக இருந்தது. – ஜெர்சன்
- இயேசு பலவீனமான மனித நிலையை ஏற்று, அன்னை மரியாவுடனும் புனித யோசேப்புடனும் அவர்களின் சோர்வடையச் செய்யும் மனித உழைப்பில் பங்கெடுத்தார். – புனித ஜஸ்டின்
- இயேசுவின் சாதாரண வேலைகளில் ஒன்று குளிருக்கு நெருப்பு மூட்டலும் உணவு தயாரித்தலும் ஆகும். – ஜெர்சன்
- ஆண்டவர் இயேசு மற்றும் அன்னை மரியாளிடம் பரிந்து பேசுபவராக புனித யோசேப்பு திகழ்கிறார். – சேல்ஸ் நகர் புனித பிரான்சிஸ்
அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். (மத் 1:19)
1. திருஅவையின் பல வல்லுநர்களின் கணிப்பில், புனித யோசேப்பு தனது அன்னையின் கருவில் இருக்கும் போதே தூய்மையாக்கப்பட்டார் என்கின்றனர். இவரே நற்செய்தியில் முதலில் புனிதர் பட்டமளிக்கப்பட்டவர். தூய ஆவியாரின் வழியாக நேர்மையாளர் என அருளப்பட்டவர். அதன் மூலம் எல்லா ஏராளமான நற்குணங்களைக் கொண்டிருந்தார்.
2. யோசேப்பின் தூய்மை அவருடைய உயர்ந்த மாண்புக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. அவர் கன்னி மரியாவின் துணைவராகவும், எல்லா வல்ல தந்தையால் அருளப்பட்ட பொறுப்பாளியாகவும், காவலராகவும், இறைமகனின் வளர்ப்புத் தந்தையாகவும் இருக்கும் பேறுபெற்றார்.
3. புனித யோசேப்பை போன்று எவரும் தூய்மைக்கும் வாய்மைக்கும் இலக்கணமாக வாழ்ந்ததில்லையென்றே கூறலாம். அவருடைய வாழும் உதாரணமான இயேசு மற்றும் அன்னை மரியாளின் முன்னிலையில் ஒழுக்கத்தில் நிறைந்து முன்னேறினார்.
புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்:
1. பாவத்திற்கு அருகில் கூட செல்ல நினையாத அளவுக்கு அவரது இதயம் தூய்மையின் நிறைவாக இருந்தது.
2. உலகத்தின் தோன்றி மறைகிற காரியங்களிலிருந்து விலகியே இருந்தார்
3. இறைநிலையின் முழுமைக்கு அயராது விடாமுயற்சியுடன் செயல்படும் ஆர்வம் கொண்டிருந்தார்.
செபம்:
ஆறுதலின் இறைவனாம் தூய ஆவியானவரே! துன்பத்தால் நான் ஒடுக்கப்பட வேண்டும் என்பது எங்கள் மீட்பின் பாதுகாப்பிற்கு உகந்ததாக நீர் கண்டால், என்னை வீழ்த்தப்படாமல் இருக்க அருள் புரியும். எல்லையில்லா ஆற்றலே என்னைத் தாங்கியருளும். நீர் எம் பலவீனத்தை அறிவீர். நாங்கள் எமக்கு அடுத்திருப்போருடன் இரக்கமுள்ளவர்களாகவும், அன்பிலும் கனிவாக நடத்தையிலும் வழிநடத்தப்படவும் அருள் புரியும். எங்களைக் கோபப்படுத்தும் காரியங்களின் மீது நீரே அன்பின் ஆளுகை செய்ய வேண்டுகிறோம். நல்லெண்ணங்களோடு நாங்கள் பல முறை நடக்க முயன்றும் முடியாத நேரத்தில் எங்களது தீர்மானங்களைத் திடப்படுத்தியதற்காக நன்றி கூறுகிறோம். உமக்கு உகந்தவற்றை நாங்கள் கடைபிடிக்க எங்களுக்குக் கட்டளையிடுவதோடு அதை நிறைவாகச் செய்து முடிக்க உமது மேலான உதவியை அளித்தருளும். இறைநீதி காரணமாக, எங்களால் தாங்கக்கூடிய சிலுவைகளால் எங்களைப் புடமிட்டுப் பார்த்தருளும். புனித யோசேப்பின் பரிந்தரையால் நாங்கள் அனுபவிக்கும் உடல் மற்றும் மன போராட்டங்களுக்குப் பிறகு உம்மில் நிலையான மகிழ்ச்சியைக் கண்டருள எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்த வழியாக மன்றாடுகிறோம். ஆமென்.
நான்காம் நாளில் ஏறெடுக்க வேண்டிய பக்தி முயற்சிகள்:
1. கிறிஸ்தவ விழுமியங்களின் நிறைவுக்கு நம்மை வளர்த்தெடுக்கிற காரியங்களிலிருந்து பிரிக்கும் தடைகளை மிக நுணுக்காமாக உணர்ந்து உள்மன ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
2. தூய்மையில் வளர அடிக்கடி பாவ அறிக்கை செய்ய வேண்டும்
3. கடந்த காலத்தில் செய்த தவறுககளுக்காகவும், இறைநிலையின் முழுமையை அடை ய அலட்சியப்படுத்திய தருணங்களுக்காகவும் உடலை வருத்தக்கூடிய பரிகார காரியங்களை ஏறெடுத்தல்
தலை: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
எல்: புனித யோசேப்பே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா! உமது தூய அன்னையின் துணையாளராம் புனித யோசேப்பின் நற்பண்புகளால் உதவப் பெற்று, நாங்கள் வேண்டிப் பெற முடியாத தேவைகளையும் அவருடைய பரிந்துரையால் பெற்றுக் கொள்ளுமாறு உம்மை வேண்டுகிறோம். தந்தையாகிய இறைவனோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
புனித யோசேப்பின் தனிச்சிறப்புகளை விவரிக்கும் வாக்கியங்கள்:
- திருமுழுக்கு யோவானைப் போன்று புனித யோசேப்பும் தான் கருவில் இருக்கும் போதே இறைவிருப்பம் என்னும் திருமுழுக்கால் தூய்மையாக்கப்பட்டார். – ஜெர்சன்
- புனித யோசேப்பு நேர்மையாளர் என்று அழைக்கப்பட்டதால் அவர் அனைத்து ஒழுக்கத்திலும் நிறைவுள்ளவராயிருந்தார். – புனிதர்கள் ஜெரோம் மற்றும் ஜான் கிறிசோஸ்தம்
- நமக்கு அனைத்து தேவைகளிலும் கடவுளிடம் உதவி பெற்றுத்தாரும் சுதந்திரத்தை புனித யோசேப்பு பெற்றிருக்கிறார். அவரது பாதுகாவலை மன்றாடுகிறவர்கள் எவரும் அதை அடையாமல் இருந்ததில்லை. – அவிலா நகர் புனித தெரசா
அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். (மத் 1:19)
1.யோசேப்பு இறை பொறுப்புக்களில் நிறைவேற்றுவதில் நேர்மையின் முன்மாதியாக விளங்கினார்.
2. யோசேப்பு தனக்கு அடுத்திருப்போரிடம் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் நேர்மையுள்ளவராக விளங்கினார். கடவுளுடைய மனுவுருவின் மறைபொருளை அறியாத நேரத்தில் அன்னை மரியாவை தீர்ப்பிடாமலும், எகிப்துக்குச் தப்பியோடும் நேரத்தில் முணுமுணுக்காமலும் இருந்தார்.
3. புனித யோசேப்பு இழிவான காரியங்களில் தன் மனத்தைச் செலுத்தவில்லை. மனுவுருவெடுத்த கடவுளை மிக நெருக்கமாக பின்பற்றுவதிலேயே ஆர்வமாயிருந்தார். ஆகையால் யோசேப்பே இயேசுவின் முதல் சீடரும் முதல் கிறிஸ்தவரும் என்று கூறுவதில் ஐயமில்லை.
புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்:
1. திருச்சட்டத்தைச் சரியாகக் கடைப்பிடித்தல் மற்றும் இறைத் தூண்டுதலுக்கு முழுமையாக வளைந்து கொடுத்தல்.
2. அயலாருக்கு அன்பு காட்டி நம்மால் இயன்ற வரை இறைப்பணியாற்றுதல்.
3. உழைத்து பாடுபட்டு துன்புறும் இவ்வாழ்கையில் இயேசுவை உறுதியோடு பிரதிபலித்தல்.
செபம்:
என்றுமுள இறைவா! 'காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் நீங்களோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை,' என்று இறைவாக்கினர் வாயிலாக நீர் கூறியது எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது. எனினும் உமது அன்பை எண்ணி வியந்து போகின்ற இந்நேரம் எமது உறுதியற்ற, நன்றிகெட்ட தனத்தையும் எண்ணி வெட்கமுறுகிறோம். இது எங்களது இறுதி காலமாயிந்தாலும் எங்களுக்கு நீரே மீட்பராய் இருக்க உமது அருளைப் பொழி;ந்தருளும்படி மன்றாடிக் கேட்கிறோம். நீர் எங்களுக்காகச் சிந்திய இரத்தப்பலியில் நாங்களும் பங்கேற்க அனுமதித்தருளும். நேர்மையின் இலக்கணமாம் புனித யோசேப்பின் பரிந்துரையால் எமது எண்ணங்களில் தூயவராக வாழ அருள் புரியும். அன்னை மரியாளிடம் உம்மை மீண்டும் ஒப்படைக்கக் காணிக்கையாக்கப்பட்ட உம்மை சிமியோனிடமிருந்து பெற்ற புனித யோசேப்பு அனுபவித்ததைப் போன்று உம்மை எங்கள் உள்ளத்தில் திவ்விய நற்கருணை வடிவில் பெற்றுக்கொள்கிற நாங்களும் உமக்கு ஆராதனையும், அன்பும், நன்றியும் அளிக்க அருளப்படும்படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்
ஐந்தாம் நாளில் ஏறெடுக்க வேண்டிய பக்தி முயற்சிகள்:
1. இறைத்திட்டத்திற்கு எதிராக அநீதியுடன் செயல்பட்ட தருணங்களுக்காக மனம் வருந்தி நற்கருணை ஆண்டவரிடம் முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
2. நமக்கு அடுத்திருப்போருக்கு எதிராகச் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக, நம்மை விட அவர்களை உயர்வாகக் கருதி சிந்தனையாலும், அவர்களோட அன்போடும் நட்புறவோடும் பேசி சொல்லாலும்;, அவர்களுடைய ஆன்ம உடல் தேவைகளில் உதவி செய்து செயலாலும் நம்முடைய நற்காரியங்களை ஏறெடுப்போம்.
3. நமது புலனுணர்வுகளைத் திருப்தியடையச் செய்து நமக்கு நாமே அநீதியிழைத்த தருணங்களுக்கு ஈடு செய்ய, நமது புலன்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செயல்களிலிருந்து விலகியிருத்தல்.
தலை: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
எல்: புனித யோசேப்பே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா! உமது தூய அன்னையின் துணையாளராம் புனித யோசேப்பின் நற்பண்புகளால் உதவப் பெற்று, நாங்கள் வேண்டிப் பெற முடியாத தேவைகளையும் அவருடைய பரிந்துரையால் பெற்றுக் கொள்ளுமாறு உம்மை வேண்டுகிறோம். தந்தையாகிய இறைவனோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
புனித யோசேப்பின் தனிச்சிறப்புகளை விவரிக்கும் வாக்கியங்கள்:
- புனித யோசேப்பு தனது முதிர்ந்த வயதிலும், தன்னுடைய உயிர்விடும் கடைசித் தருணத்திலும் கடவுளின் கட்டளைகளை மிக நுணுக்கமாகப் பின்பற்றக் கூடியதை மட்டுமே தனது ஒரே குறிக்கோளாய்க் கொண்டிருந்தார். – புனித ஜான் தமஸ்கஸ்
- புனித யோசேகப்பு உலகக் காரியங்களை அறவே விடுத்து விண்ணக காரியங்களில் மட்டுமே ஆசை கொண்டிருந்தார். – புனித பிரிஜிட்
- அவர்தம் வறுமையை ஏற்று வளமாய் வாழ்ந்தார் - புனித பொனவெந்தூர்
அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். (மத் 1:19)
1. மெசியாவின் வருகையைக் குறித்து வாக்களிக்கப்பட்ட முன்னோர்களுக்கும் எல்லா முதுபெரும் தந்தையர்களுக்கும் மணிமுடியாக விளங்குகின்றார்.
2. பழைய ஏற்பாட்டு புனிதர்களுக்கும் யோசேப்பு மணிமுடியாக விளங்குகின்றார். அவர்களுடைய தனிச்சிறப்புகளும் நற்குணங்களும் இவரிலேயே முழுமை பெறுகின்றன
3. புதிய ஏற்பாட்டு புனிதர்களுக்கும் மணிமுடியாக விளங்குகின்றார். திருக்குடும்பத்தின் தலைவராகவும் மனுவுருவெடுத்த இறைமகனின் ஒப்பற்ற வளர்ப்புத் தந்தையாகவும் இருந்து சிறப்பாக அவரது பணிகளைச் செய்ததால் இறைவனின் எல்லாப் பணியாளர்களைக் காட்டிலும் உயர்ந்த, நம்பிக்கையும் விவேகமுமுள்ள பணியாளனாகக் கருதப்படுகிறார்.
புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்:
1. நற்காரியங்களின் கனிகளால் நிறைந்த புனித யோசேப்பின் உயிருள்ள நம்பிக்கை.
2. வளமையிலும் வறுமையிலும் அவருடைய சமநிலைமை.
3. இறைமதிப்புக்கும் மனித மீட்பின் மீதும் அவர் காட்டிய பேரார்வம்.
செபம்:
எங்களைப் படைத்தவரும், எமது தலைவருமான இயேசுவே! உமது பேரிரக்கத்தின் உதவியின்றி நாங்கள் இருளில் முழ்கி அழிந்துபோவோம். ஆகையால் புனித யோசேப்பின் பரிந்துரையால் நாங்கள் வெகு நாட்களாய்ப் போராடிக்கொண்டிருக்கும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு உமது நம்பிக்கையாளர்களின் மகிழ்ச்சியில் இணைந்திடுவோமாக. நாங்கள் அனுபவித்த உம்முடைய நன்மைத்தனத்தின் மீதும் பேராற்றலின் மீதும் முழு நம்பிக்கையும் வைக்கிறேன். உலகின் கவர்ச்சிகளை வெறுக்கவும், துன்பகரமான ஆபத்துக்களின் மத்தியில் பயப்படாமல் இருக்கவும் எங்களுக்கு உறுதியளித்தருளும்.
எமது மீட்பரே! எம் பாவங்களால் உம்மை இழந்து தவிக்கிறோம். எனது தவறான மனப்பான்மைகளைப் பின்பற்றி நாங்கள் தெரிந்தே உம்மைப் பிரிந்துவிட்டோம். பாவிகளைத் தேடி வந்த இயேசுவே எங்கள் மேல் மனமிரங்கும். உம்முடைய அருளால் எங்களது வாழ்வைப் புதிப்பித்துக் கொண்டு உம்மைத் தந்தையோடும் தூய ஆவியாரோடும் ஆட்சி செய்கின்றவராய் வான் வீட்டில் காண அருள் புரியும். ஆமென்
ஆறாம் நாளில் ஏறெடுக்க வேண்டிய பக்தி முயற்சிகள்:
1. கடும் நோன்பிருத்தல்
2. உடல் அல்லது ஆன்மிகம் சார்ந்த இரக்கச் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்தல்.
3. புனித யோசேப்பு அனுபவித்த ஆசிர்வாதங்களில் பங்கெடுக்கும்படியாக இறைவனிடம் செபித்தல்
தலை: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
எல்: புனித யோசேப்பே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா! உமது தூய அன்னையின் துணையாளராம் புனித யோசேப்பின் நற்பண்புகளால் உதவப் பெற்று, நாங்கள் வேண்டிப் பெற முடியாத தேவைகளையும் அவருடைய பரிந்துரையால் பெற்றுக் கொள்ளுமாறு உம்மை வேண்டுகிறோம். தந்தையாகிய இறைவனோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
புனித யோசேப்பின் தனிச்சிறப்புகளை விவரிக்கும் வாக்கியங்கள்:
- யாக்கோபு தனது சிறந்த பக்தி மற்றும் நல்லொழுக்கங்களின் காரணமாகப் பெரியவராகக் கருதப்பட்டாலும், இதே காரியங்களில் அவர் முதுபெரும் தந்தையான புனித யோசேப்பினால் மிக சொற்ப தூரமே மிஞ்சப்பட்டார்.
- புனித யோசேப்பு நோவாவைக் காட்டிலும் பெரியவர். எந்தக் காரணத்திற்காக அன்னை மரியா பெண்களுள் பேறுபெற்றவர் ஆனாரோ, அதே காரணத்திற்காகத் தான் புனித யோசேப்பும் ஆண்களுள் பேறுபெற்றவர் ஆனார்.
- எந்த முதுபெரும் தந்தையரும் இறைவாக்கினர்களும் அனுபவிக்காத இரண்டு வரங்களைப் பெருமிதம் கொள்ளும் வகையில் புனித யோசேப்பு பெற்றிருந்தார்: அவர் அன்னை மரியாவுக்குக் கணவரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்குத் தந்தையுமாகவும் இருந்தார்.
- அருளின் திருச்சட்டத்தின் கீழ், நீதியின் பொருட்டு முதன் முதலில் துன்புறுத்தப்பட்டவர் புனித யோசேப்பு தான், ஏனெனில் அவருடைய ஆன்மா துன்பமெனும் வாளினால் துளைக்கப்பட்டது. – ருபர்ட்
- இதுவரை புனித யோசேப்பிடம் கேட்ட எந்த வரங்களையும் அவர் பெற்றுத் தராமல் இருந்ததாக ஒரு நாளும் என் நினைவில். – புனித அவிலா தெரசா
ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றினார் (மத் 2:13)
1. மெசியாவின் வருகையைக் குறித்து வாக்களிக்கப்பட்ட முன்னோர்களுக்கும் எல்லா முதுபெரும் தந்தையர்களுக்கும் மணிமுடியாக விளங்குகின்றார்.
2. பழைய ஏற்பாட்டு புனிதர்களுக்கும் யோசேப்பு மணிமுடியாக விளங்குகின்றார். அவர்களுடைய தனிச்சிறப்புகளும் நற்குணங்களும் இவரிலேயே முழுமை பெறுகின்றன
3. புதிய ஏற்பாட்டு புனிதர்களுக்கும் மணிமுடியாக விளங்குகின்றார். திருக்குடும்பத்தின் தலைவராகவும் மனுவுருவெடுத்த இறைமகனின் ஒப்பற்ற வளர்ப்புத் தந்தையாகவும் இருந்து சிறப்பாக அவரது பணிகளை செய்ததால் இறைவனின் எல்லா பணியாளர்களைக்க காட்டிலும் உயர்ந்த, விசுவாசமும் விவேகமுமுள்ள பணியாளனாக கருதப்படுகிறார்.
புனித யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்:
1. நற்காரியங்களின் கனிகளால் நிறைந்த புனித யோசேப்பின் உயிருள்ள நம்பிக்கை.
2. வளமையிலும் வறுமையிலும் அவருடைய சமநிலைமை.
3. இறைமதிப்புக்கும் மனித மீட்பின் மீதும் அவர் காட்டிய பேரார்வம்.
செபம்:
எங்களைப் படைத்தவரும், எமது தலைவருமான இயேசுவே! உமது பேரிரக்கத்தின் உதவியின்றி நாங்கள் இருளில் முழ்கி அழிந்துபோவோம். ஆகையால் புனித யோசேப்பின் பரிந்துரையால் நாங்கள் வெகு நாட்களாய் போராடிக்கொண்டிருக்கும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு உமது நம்பிக்கையாளர்களின் மகிழ்ச்சியில் இணைந்திடுவோமாக. நாங்கள் அனுபவித்த உம்முடைய நன்மைத்தனத்தின் மீதும் பேராற்றலின் மீதும் முழு நம்பிக்கையும் வைக்கிறேன். உலகின் கவர்ச்சிகளை வெறுக்கவும், துன்பகரமான ஆபத்துக்களின் மத்தியில் பயப்படாமல் இருக்கவும் எங்களுக்கு உறுதியளித்தருளும்.
எமது மீட்பரே! எம் பாவங்களால் உம்மை இழந்து தவிக்கிறோம். எனது தவறான மனப்பான்மைகளைப் பின்பற்றி நாங்கள் தெரிந்தே உம்மை பிரிந்துவிட்டோம். பாவிகளைத் தேடி வந்த இயேசுவே எங்கள் மேல் மனமிரங்கும். உம்முடைய அருளால் எங்களது வாழ்வை புதிப்பித்து கொண்டு உம்மை தந்தையோடும் தூய ஆவியாரோடும் ஆட்சி செய்கின்றவராய் வான் வீட்டில் காண அருள் புரியும். ஆமென்
ஆறாம் நாளில் ஏறெடுக்க வேண்டிய பக்தி முயற்சிகள்:
1. கடும் நோன்பிருத்தல்
2. உடல் அல்லது ஆன்மிகம் சார்ந்த இரக்கச் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்தல்.
3. புனித யோசேப்பு அனுபவித்த ஆசிர்வாதங்களில் பங்கெடுக்கும்படியாக இறைவனிடம் செபித்தல்
தலை: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
எல்: புனித யோசேப்பே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா! உமது தூய அன்னையின் துணையாளராம் புனித யோசேப்பின் நற்பண்புகளால் உதவப் பெற்று, நாங்கள் வேண்டிப் பெற முடியாத தேவைகளையும் அவருடைய பரிந்துரையால் பெற்றுக் கொள்ளுமாறு உம்மை வேண்டுகிறோம். தந்தையாகிய இறைவனோடும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
புனித யோசேப்பின் தனிச்சிறப்புகளை விவரிக்கும் வாக்கியங்கள்:
- யாக்கோபு தனது சிறந்த பக்தி மற்றும் நல்லொழுக்கங்களின் காரணமாக பெரியவராக கருதப்பட்டாலும், இதே காரியங்களில் அவர் முதுபெரும் தந்தையான புனித யோசேப்பினால் மிக சொற்ப தூரமே மிஞ்சப்பட்டார்.
- புனித யோசேப்பு நோவாவைக் காட்டிலும் பெரியவர். எந்த காரணத்திற்காக அன்னை மரியா பெண்களுள் பேறுபெற்றவர் ஆனாரோ, அதே காரணத்திற்காகத் தான் புனித யோசேப்பும் ஆண்களுள் பேறுபெற்றவர் ஆனார்.
- எந்த முதுபெரும் தந்தையரும் இறைவாக்கினர்களும் அனுபவிக்காத இரண்டு வரங்களை பெருமிதம் கொள்ளும் வகையில் புனித யோசேப்பு பெற்றிருந்தார்: அவர் அன்னை மரியாவுக்கு கணவரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு தந்தையுமாகவும் இருந்தார்.