இறை இரக்கத்தின் ஜெபமாலை
1. தொடக்க ஜெபம்:
இயேசுவே நீர் இறந்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன் .
2. பெரிய மணியில்:
நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவரும் உமது நேச மகனுமான இயேசு கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும் அகில உலகின் பாவங்களுக்காகவும், பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
3. சிறிய மணிகளில் (10):
இயேசுவின் துன்பகரமான பாடுகளைப் பார்த்து...
எங்கள் மீதும் முழு உலகின்மீதும் இரக்கமாயிரும். ( 10 முறை)
(2, 3ஆம் படிகளை 5முறை சொல்லவும் (5 மறையுண்மைகளைத் தியானிப்பதுபோல்))
4. முடிவில்:
தூய இறைவனே! தூய வல்லவரே! தூய அழிவில்லாதவரே! எங்கள் மீதும் முழு உலகின்மீதும் இரக்கமாயிரும். (3x)
இறுதி செபம்:
இரக்கத்தின் தந்தையே இறைவா! ஆறுதலின் கடவுளே! உம்மீது நம்பிக்கையும் எதிர்நோக்கும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத் துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருள் கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து இவற்றை எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
