Wednesday, 9 February 2022

தூய்மைமிகு நற்கருணை செபமாலை

தூய்மைமிகு நற்கருணை செபமாலை

Click the link to download the PDF

(சிலுவையில்) - நம்பிக்கை அறிக்கை 

(3 மணிகளில்)
        -      இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் (விண்ணுலகிலிருக்கிற...)
        -      தூதுரை மன்றாட்டு (அருள் நிறைந்த மரியே...)
        -      மூவொரு இறைவன் புகழ்

 

முதல் மறையுண்மை: (பதக்கத்தின் மீது)

தூய்மைமிகு நற்கருணையின் முன்னடையாளம்
(தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது - யோவான்: 2: 1 - 11).
கடைபிடிக்க வேண்டிய புண்ணியம் : பங்கேற்பு, ஈடுபாடு

 

(சிறிய 3 மணிகளில்)
        -      இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் (விண்ணுலகிலிருக்கிற)
        -      தூதுரை மன்றாட்டு (அருள் நிறைந்த மரியே)
        -      நிலையான புகழுக்குரிய (3 முறை)

(பெரிய மணியில்)
-              மூவொரு இறைவன் புகழ் (2, 3, 4, 5 ஆம் மறையுண்மை)

 

இரண்டாம் மறையுண்மை

தூய்மைமிகு நற்கருணையை உறுதி செய்யப்பட்டது.
(ஐந்து அப்பம் பலுகியது - யோவான் 6: 1 - 13)
கடைபிடிக்க வேண்டிய புண்ணியம் : பகிர்வு

மூன்றாம் மறையுண்மை

தூய்மைமிகு நற்கருணையை நிறுவியத
(கடைசி இராவுணவு - மாற்க: 14: 22 - 25)
கடைபிடிக்க வேண்டிய புண்ணியம் : தியாகம்

நான்காம் மறையுண்மை

தூய்மைமிகு நற்கருணைய கொண்டாடியது
(எம்மாவு சீடர்கள் -லூக்கா: 24: 13 - 35)
கடைபிடிக்க வேண்டிய புண்ணியம் : தோழமை

ஐந்தாம் மறையுண்மை

இன்று தூய்மைமிகு நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம்
(உலகம் முடியும்வரை எந்நாளும் உங்களோடுஇருக்கிறேன் - மத்தேயு: 28:16 - 20)
கடைபிடிக்க வேண்டிய புண்ணியம் : சேவை

 

இறுதி ஜெபம்

நற்கருணை மாதாவே! ஆமென், உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் என்று சொல்லி நற்கருணை நாதரை பெற்றுக் கொண்டவரே. காடு மலை என்று பாராமல் எலிசபெத் அம்மாளுக்கு உதவி செய்ய நற்கருணை நாதரை சுமந்துக் கொண்டு விரைந்து சென்றவரே. உலகம் மீட்பு பெறுவதற்காக நற்கருணை நாதரை ஈன்றவரே. காலமெல்லாம் நற்கருணை நாதரை தியானித்து கடவுளை புகழ்ந்து கல்வாரி மலையில் ஆண்டவர் இயேசுவோடு பலியாகி தேவ நற்கருணையாக மாறியவரே, நாங்களும் உயிருள்ள தேவ நற்கருணையாக வாழ எங்களுக்காக பரிந்து பேசுவீராக. ஆமென்.