Monday, 3 March 2025

இயேசு மரம் (தவ மரம்)

 

இயேசு மரம் (தவ மரம்)

இயேசு மரம் தவக்காலத்தில் ஏறெடுக்கப்படும் ஒரு பக்தி முயற்சி. திருவருகைக்காலத்திற்கு எவ்வாறு ஈசாய் மரம் ஒரு பொருள் நிறைந்த பக்தி முயற்சியாக விளங்கியதோ அதே போன்று தவக்காலத்திற்கு இயேசு மரம் ஒரு அர்த்தமுள்ள ஆன்மிகப் பயிற்சியாகவும், ஆண்டவரின் வாழ்க்கை, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை ஆழ்ந்து தியானிக்கவும் உதவுகிறது. ஈசாய் மரத்தில் நாம் இறைமகன் இயேசு மனித உடலேற்ற மறைபொருளின் மீட்புத் திட்டப் பயணத்தில் வழிவந்த மனிதர்களை அடையாளங்கள் வழியாக நினைவு கூருகிறோம். ஆனால் இயேசு மரத்தில் இயேசு பிறந்தது முதல் உயிர்த்து எழுந்தது வரையிலான அவருடைய வாழ்க்கையின் நிகழ்வுகளை அடையாளங்களின் வாயிலாக நினைவுகூர்கிறோம்.