திருவருகைக்கால முதல் ஞாயிறு
(இறைவாக்கினர்களின் மெழுகுதிரி)
இறைவாக்கினர்களின் ஒளி ஊதா நிறம்
இது இறைவாக்கினர்களின் மெழுகுத்திரி என்றழைக்கப்படுகிறது. இஸ்ரயேல் மக்களின் இறைவாக்கினர்கள் அனைவரும் மெசியாவின் வருகையைப் பற்றி மக்களுக்கு அறிவித்தனர். தாவீதின் மரபிலிருந்தே மெசியா பிறப்பார் என்றும் முன்னறிவித்தனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலே நமது நம்பிக்கையும் மலர்ந்தது. இயேசு மீண்டும் வருவார் என நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கிறோம். உலகின் ஒளியாக பெத்லகேமில் பிறந்த இயேசு மீண்டும் வந்து நம்மை நம் பாவங்களிலிருந்து மீட்பார் எனும் உறுதியான எதிர்நோக்குடன் இந்த முதல் ஒளியை ஏற்றுகிறோம்.
மெழுகுதிரியை ஏற்றுதல்
(அருள்பணியாளர் மெழுகுதிரியை ஏற்றுவார்)
இறைவேண்டல்
இறைவா! எங்கள் பாவங்களினால் ஏற்படும் தீங்கிலிருந்து நாங்கள் மீட்கப்படுவதற்கும், நீர் அளிக்கும் விடுதலையினால் நாங்கள் காப்பாற்றப்படவும், நாங்கள் தகுதியுடையவர்களாகும்படி உமது பாதுகாப்பின் அருளை அளித்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
