Friday, 2 December 2022

ஈசாய் மரம் - திருவருகைக்கால முதல் வார சனி (விருப்பம்)

 திருவருகைக்கால முதல் வார சனி (விருப்பம்)

இஸ்ரயேல் மக்கள்

வாசகம்: தொடக்க நூல் 35:9-15

சிந்தனை:

யாக்கோபுக்கு இறைவன் இஸ்ரயேல் என்று பெயரிட்டார். அதற்கு கடவுளோடு போராடுபவன் என்பது பொருள். அவர் வழிவந்த பன்னிரு புதல்வர்கள் தான்இறைவன் தனக்கென தேர்ந்தெடுத்த இஸ்ரயேல் இனமாகக் கருதப்படுகின்றனர். பழைய ஏற்பாடு முழுவதும் இவர்களது கதை நிறைந்திருக்கிறது. இவர்கள் உலகிற்கு ஒளியாகவும் இறைவனின் புனிதத்துவத்தை பிரதிபலிக்கக் கூடியவர்களாகவும் இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து பகலில் மேகத்தூண் மூலமும் இரவில் நெருப்புத்தூண் மூலமும் வழிநடத்தினார். சீனாய் மலைமீது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அவர்கள் இறைநம்பிக்கையுடனும் தூய்மையாகவும் வாழ அங்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார்.

கீழ்ப்படிதலின்றியும் நம்பிக்கை குறைபாடாலும் அவர்கள் அடிக்கடி அலைக்கழிக்கப்பட்டாலும் கடவுள் இரக்கம் கொண்டு பொறுமையாக இருந்து தம் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வந்தார். இஸ்ரயேலரின் வாழ்வு இறைநம்பிக்கைக் கொண்டும் நன்றியுணர்வோடும் அவரைச் சார்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. கடவுளுக்கும் அவர் மக்களுக்கும் இடையே ஒரு புதிய நிலையான உறவை நிறுவும் உடன்படிக்கையின் நிறைவான இயேசுவை இது சுட்டிக்காட்டுகிறது.

செபம்:

எங்கள் பராமரித்து வரும் கடவுளே! இஸ்ரயேல் இனத்தின் மீதும் எங்கள் மீதும் அன்போடும் பொறுமையோடும் இருப்பதற்காக நன்றி. உமது வழிநடத்துதலில் நம்பிக்கை வைத்து உமது வழிகளைப் பின்பற்ற அருள்புரியும். ஆமென்