Saturday, 10 December 2022

திருவருகைக்கால மெழுகுவர்த்திகளை ஏற்றும் வழிமுறை - வாரம் 3

 திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறு

(இடையர்களின் திரி)


மகிழ்ச்சி ஒளி                                                                      இளஞ்சிவப்பு நிறம்

'இன்றைய ஞாயிறு 'மகிழ்ச்சியின் ஞாயிறு' (Gaudete Sunday) என்று அழைக்கப்படுகிறது. இன்றைய திரி மகிழ்ச்சியின் திரி (அ) இடையர்களின் திரி (Candle of Joy or Shepherd's Candle) என்றழைக்கப்படுகிறது. இது இயேசுவின் வருகைக்காக வழியை ஆயத்தப்படுத்திய திருமுழுக்கு யோவானை அடையாளப்படுத்துகிறது. ஆண்டவரின் வருகை அண்மையில் உள்ள காரணத்தால் நாம் மகிழ்ந்திருக்க இறைவன் அழைக்கின்றார். உலகின் மீட்பரைப் பெற்றெடுக்கப்போவதை நினைந்து மகிழ்ந்த இடையரைப் போல இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து மகிழ்ச்சித் திரியை ஏற்றுவோம். 


மெழுகுதிரியை ஏற்றுதல்
(அருள்பணியாளர் மெழுகுதிரியை ஏற்றுவார்)


இறைவேண்டல்

இறைவா! எங்கள் மன்றாட்டுக்களுக்கு செவிசாய்த்து, உமது வருகையின் அருளால் எங்கள் மனதின் இருளைப் போக்கிட வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.