Saturday, 17 December 2022

திருவருகைக்கால மெழுகுவர்த்திகளை ஏற்றும் வழிமுறை - வாரம் 4

திருவருகைக்கால நான்காம் ஞாயிறு

(வானதூதர்களின் திரி)

அன்பு ஒளி                                                                                        ஊதா நிறம்

இது அன்பின் திரி என்று அழைக்கப்படுகிறது. நாம் அனைவரும் அழியாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற தம் ஒரே மகனை உலகுக்கு அனுப்பிய இறைவனின் அன்பை நினைத்து கொண்டாடுகிறோம். அன்புக்கு முடிவே இல்லை. இறைவனின் அன்பு இயேசுவில் நிறைவு அடைந்ததுள்ளதை நினைவூட்டி அன்புத்திரி ஏற்றப்படுகிறது

 

மெழுகுதிரியை ஏற்றுதல்
(அருள்பணியாளர் மெழுகுதிரியை ஏற்றுவார்)


இறைவேண்டல்

இறைவா! உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து பெரு வல்லமையுடன் எங்களுக்கு உதவ வாரும். அதனால் உமது அருளுதவியால், எங்கள் பாவச் செயல்களின் விளைவினை உமது இரக்கப் பெருக்கின் மன்னிப்பால் வென்றிட வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.