திருவருகைக்கால இரண்டாம் ஞாயிறு
(பெத்லகேம்/தயாரிப்பின் திரி)
அமைதி ஒளி ஊதா நிறம்
பெத்லகேமில் பிறக்கப்போகும் மீட்பரைக் குறித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றினார். ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தப்படுத்துவதை இத்திரியானது குறிக்கிறது. இறைவாக்கினர் எசாயா இயேசுவை அமைதியின் அரசர் என அழைத்தார். திருமுழுக்கு யோவான் வழியாக அந்த அமைதியின் அரசர் நம்மில் குடிகொள்ள இறைவன் நம் இதயங்களை தயாரிக்கிறார். சுயநலத்;தாலும் பேராசையாலும் நம் குடும்பங்களிலும் உலகிலும்; இழந்துபோன அமைதியை இயேசு தம் திருவருகையின் கொடையாகத் தர வேண்டி அமைதியின் திரியை ஏற்றுவோம்.
(அருள்பணியாளர் மெழுகுதிரியை ஏற்றுவார்)
இறைவேண்டல்
இறைவா! உமது ஒரே திருமகனின் வருகையின் பொருட்டு நாங்கள் ஆயத்தம் செய்வதற்காக எங்கள் இதயங்களை தூண்டியெழுப்பியருளும். அவருடைய வருகையின் மூலம் நாங்கள் தூய மனதுடன் உமக்குச் சேவை செய்யத் தகுதியுடையவர்களாக ஆக்கப்பட வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
